Wednesday, January 26, 2011

மீன் பாடும் தேன் நாட்டில் தெய்வீக மறுமலர்ச்சி


வாழும் கலை அமைப்பின் நிறுவனர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்களால் உலக அமைதிக்காகவும் , ஒற்றுமைக்காகவும் , ஆரோக்கியம், அன்பு , மனித நேயம் மற்றும் தமிழ்  கலாச்சாரம் தழைத்தோங்கவும் இலங்கை திருநாட்டில் கிழக்கு மாகாணத்தின் மீன் பாடும் தேன் நாடாம் மட்டகளப்பு  மாநகரின் வெபர் திறந்த வெளி  வெளியரங்கில்  22 ம் திகதி ஜனவரி 2011 ம்  ஆண்டு சனிக்கிழமை மாலை 3 .30  மணிக்கு நடந்த இந்நிகழ்வில் மகா ருத்ர பூஜையை தொடர்ந்து 21000 இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து வழங்கிய தேவரபரயணம் நடைபெற்றது. இறைவன் அருள் பெற்ற சமயகுரவர்கள் காலத்தில் காணப்பட்ட தெய்வீகக் பொற்காலம் மீண்டும் ஆரம்பமாகும் பொருட்டு அவர்களால் பாடப்பட்ட 12 திருமுறை தேவாரங்களிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட சில தேவாரங்கள் இத்தேவாரபாராயணத்தில் பாடப்படும். இந்த பிரம்மாண்டமான நிகழ்வில் யாழ்பாணம், மட்டகளப்பு, மன்னார், கண்டி,அட்டன் , வவுனியா, திருகோணமலை, கொழும்பு ,நுவரேலியா போன்ற பல பாகங்களிருந்தும் , கனடா, லண்டன், இந்தியா, துபாய் போன்ற பல வெளிநாடுகளிலிருந்தும் ௫௦௦௦௦ மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் தலைமையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற தேவார பாராயண நிகழ்வில் சுமார் 21 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டனர். இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்,மீள்குடியேற்ற பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,பா.அரியநேந்த்திரன், பொன்.செல்வராசா உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் மேள,தாள வாத்தியங்கள் முழங்க ரவிசங்கர் குருஜி வரவேற்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த சுமார் 21 ஆயிரம் மக்கள் இணைந்து தேவார பாராயணத்தில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் குருஜி பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிய பின்னர் உரையாற்றியபோது; உங்களிடமுள்ள அனைத்துக் குறைகளையும் இந்த மைதானத்திலேயே விட்டுவிட்டுச் செல்லுங்கள். மனித சமுதாயம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் குலம்,கோத்திரம்,சாதி பேதம் என்ற அனைத்தினையும் அகற்றுங்கள். தவறுகளை மன்னித்து விடுங்கள்.நடந்ததெல்லாம் நடந்துவிட்டன. மெஞ்ஞானம் விஞ்ஞானம் என்ற உண்மையைக் கூறுகின்றன. இதனை உணர்த்துவதே வாழும் கலை அமைப்பின் இரகசியமாகும். தற்போதெல்லாம் தமிழ் திரிபடைந்துள்ளது. இனிமேல் இலங்கையில் இருந்துதான் தமிழைக் கற்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில் பிரதியமைச்சர்களான வி.முரளிதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்,சி.யோகேஸ்வரன் எம்.பி. ஆகியோரும் உரை நிகழ்த்தினர்
-

No comments: