Thursday, October 8, 2009

அச்சமற்ற வாழ்வு அவசியம்: ஸ்ரீ ஸ்ரீ இரவி சங்கர்



இன்றுள்ள நிலையில் அச்சமற்ற வாழ்வும், மனிதர்களுக்கிடையே இணைவும், அமைதியுமே அவசியம் என்று ஆன்மீகக் குரு ஸ்ரீ ஸ்ரீ இரவி சங்கர் கூறியுள்ளார்.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் 10,000 மக்கள் கூடிய மாபெரும் கூடலில் கூட்டுத் தியானம், பிரார்த்தனை, மந்திரம் ஓதல் ஆகியவற்றை நடத்தி, வந்துள்ள மக்கள் அனைவரையும் ஆசி்ர்வதித்த குரு ஸ்ரீ ஸ்ரீ இரவி சங்கர், மக்கள் யாவரும் அச்சமின்றி வாழ்வதே இன்றுள்ள நிலையில் மிக அவசியமானதாகும் என்று கூறியுள்ளார்.

‘மனங்களையும், இதயங்களையும் இணைப்போம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்தக் கூடலில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், காலி, மாத்தரை ஆகிய இடங்களில் இருந்து இரயில்களிலும் பேருந்துகளிலும் கொழும்பில் திரண்ட அனைத்து மதச் சமூகத்தினரிடையே குரு ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர் ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார்.

மாலையில் நடந்த சுக்சாம யோகா என்று நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் தேவாரம் பாடினர்.

இதன் பிறகு ருத்ரப் பூசை நடைபெற்றது. இப்பூசையின் பொருளை விளக்கிய குரு ஸ்ரீ ஸ்ரீ இரவி சங்கர், மானுட உணர்வை உயர்த்தும் ஆதிகால பூசை இதுவென்று கூறினார். இந்தப் பூசையில் இயற்கையின் ஆற்றல்கள் அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது என்றும், இயற்கையின் ஒவ்வொரு துளியிலும் இறைவன் உள்ளான் என்பதையும் இப்பூசை நமக்கு உணர்த்துகிறது.

ஐ.நா.வின் உலகப் பொது நல அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மன நல மாநாட்டிலும் குரு ஸ்ரீ ஸ்ரீ இரவி சங்கர் துவக்கவுரையாற்றினார்.

No comments: