டீரஸ்டன், ஜெர்மனி, அக்டோபர் 11, 2009: ஆன்மீக குருவும், வாழும் கலை அமைப்பின் நிறுவனறுமான ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களின் எல்லை இல்லா அனைத்து சமூகத்தினறுக்குமான செயலை வழியுறுத்தியும், உலகத்தாரின் சமத்துவமான வாழ்க்கைக்காக அவர் கொண்டுள்ள உறுதிக்காகவும் அவருக்கு 2009ம் ஆண்டிற்கான சமத்துவ கலாச்சார விருது வழங்கப்பட்டது. மேலும்; ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தி;ற்காக கலாச்சார , சண்டை நடைபெறும் இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தியதையும், தொழில் ஒழுக்கவியலையும் அத் தேர்வு குழுமத்தினர் சிறப்பு அம்சமாக கருதியுள்ளனர்
போரம் டிபேரியஸ்சால் (Forum Tiberius) ஆரம்பிக்கப்பட்ட இந்த விருதை, டிரெஸ்டன் மேயர் திருமதி. ஹேல்மா ஊர்ஸ் வழங்க அரங்கமே எழுந்து கைத்தட்டியது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது டிரஸ்டன்னில் உள்ள வாக்ஸ்வேகன்ஸ் லேன்ட்மார்க் டிரன்ஸ்பிரனஸி தொழ்ற்கூடத்தில் (Volkswagen’s landmark transparent factory) உலக கலாச்சார கூட்டத்தில் பிரத்தியேகமாக நடத்தப்பட்டது.
திரு. நிரீ தேவா - ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஆங்கிலேய பிரமுகர், பேராசிரியர் ஜேஸ்னி ஷவான் - 2009க்கான ஜெர்மன் குடியரசு தலைவர் தேர்தலுக்கான பிரமுகர் மற்றும் பெர்லின் ஹம்போல்ட் வேர்டினியா ஸ்கூல் ஆப் கவர்ன்ஸின் தலைவர், பேராசிரியர் பேர்ன்ட் குக்கென்பெர்கர் பெர்லின் லீசிங் பல்கலைகழக தலைவர் உட்பட பல பிரமுகர்களும் ஸ்ரீ ஸ்ரீ அவர்களுக்கு சிறப்பு மரியாதை செய்தனர்.
இவ்விருதை பெற்ற ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் கூறியதாவது: மன அழுத்தம் மற்றும் வன்முறையற்ற சமூகத்தை உருவாக முன்னிற்கும் அனைத்து மக்களுக்களிடையேயும் இவ்விருதை பகிர்ந்து கொள்வதாக கூறினார். இவ்விருதானது ஒரு தனிமனிதனுக்கானது அல்ல என்றும் பலதரப்பட்ட கலாச்சாரம் மற்றும் உலகம் ஒரு குடும்பம் என்ற அந்த உயரிய அடிப்படை கோட்பாட்டிற்காகவும் தான் என்று கூறினார்.
No comments:
Post a Comment